ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் வரி உயர்வு திட்டம் இடைநிறுத்தம்

பிரித்தானியாவில் எரிபொருள் வரியை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக
பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு யுக்ரைன் போர் தொடங்கியபோது, எரிபொருள் வரியில் 5 பென்ஸ் (pence)தற்காலிக குறைப்பு வழங்கப்பட்டது.

அந்தக் குறைப்பை இந்த ஆண்டு படிப்படியாக நீக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், ஈரான் போரைத் தொடர்ந்து அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக, இந்த வரி உயர்வை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.

இதையடுத்து, திட்டமிட்டபடி 5 பென்ஸ் வரி உயர்வை அமுல்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது.

“இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்திற்கு எரிபொருள் வரி முடக்கத்தை நீட்டிப்பதன் மூலம் ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்கிறோம்,” என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மேலும், சரக்கு வாகன சாரதிகளுக்கு 12 மாத வீதி வரி விலக்கு வழங்கப்படும் என பிரதமர் ஸ்டார்மர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!