ஐரோப்பா செய்தி

ரஷ்ய எரிபொருள் இறக்குமதி அனுமதி குறித்து பிரிட்டன் அரசுக்கு கடும் விமர்சனம்

ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிற நாடுகளில் சுத்திகரிக்கப்படும் டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதிக்கு
வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி குறித்து அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அவசரக் கேள்விக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant),
“தற்போதுள்ள எந்தத் தடைகளையும் அரசாங்கம் நீக்கப் போவதில்லை என கூறினார்.

டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை தொடர்ந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் மட்டுமே குறிப்பிட்ட தற்காலிக
உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு, யுக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவிலிருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளதை காட்டுகிறது என்று நிழல் ஸ்காட்லாந்து செயலாளர் ஆண்ட்ரூ போவி (Andrew Bowie) குற்றம் சுமத்தினார்.

இதனை அவர் “முழுமையான அவமானம்” என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “உக்ரைனில் புதின் வெற்றி பெற அனுமதிக்கப்பட மாட்டார். ரஷ்யாவின் போர் இயந்திரத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

மேலும், 3,300-க்கும் அதிகமான தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான ரஷ்ய மறைமுக எண்ணெய் கப்பல்களும் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!