லார்ட் மாண்டல்சன் பதவி நீக்கத்துக்கு பின் உயர்மட்ட தூதுவர் திடீர் ராஜினாமா
லோர்ட் மண்டேல்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்காலத் தூதராகப் பணியாற்றிய உயர்மட்ட தூதுவர் ஜேம்ஸ் ரோஸ்கோ
திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது விலகலுக்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது
2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்த ரோஸ்கோ, மண்டேல்சனுக்குப் பதிலாக அமெரிக்காவிற்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பின்னர் அந்தப் பொறுப்பு சர் கிறிஸ்டியன் டர்னருக்கு (Sir Christian Turner) வழங்கப்பட்டது.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மண்டேல்சனுக்கு நீண்டகால தொடர்புகள் இருந்தது குறித்து தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அவரை பதவியில் இருந்து நீக்கினார்.
எப்ஸ்டீனுடன் தொடர்புடைய விவகாரத்தில் தாம் தவறு செய்யவில்லை என்று மண்டேல்சன் முன்பே மறுத்திருந்தார். அதேவேளை, எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதற்கிடையில், கடந்த செப்டம்பரில் டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது ரோஸ்கோ முக்கிய பங்கு வகித்திருந்தார்.
வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட குறுகிய அறிக்கையில், “ஜேம்ஸ் ரோஸ்கோ தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்” என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




