செய்தி விளையாட்டு

சூரியவன்ஷி அதிரடி: ராஜஸ்தான் வெற்றி!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.

தொடர்ந்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, இளம் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி அபாரமாக ஆடி வெறும் 38 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 93 ஓட்டங்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார்.

இறுதியில் 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்களைப் பெற்று ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.

குறித்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி தங்களது play-off வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!