ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சராக பதவியேற்கிறார் ஜான் ஸ்வினி!
ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியின் (SNP) தலைவர் ஜான் ஸ்வினி ( John Sweeney), ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்கெடுப்பிற்கு பிறகு அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மன்னர் சார்லஸ் வழங்கிய அரச ஆணை மூலம் அவர் முறைப்படி இன்று பதவியேற்கவுள்ளார்.
தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய ஸ்வினி, “முழு ஸ்காட்லாந்திற்குமான முதல் அமைச்சராக இருப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.
1999 முதல் ஸ்காட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஸ்வினி, SNP தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, 2024 முதல் ஸ்காட்லாந்தின் அரசாங்கத்தை வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





