ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து விவாதிக்க விருப்பமில்லை – ஸ்டார்மர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Wes Streeting மற்றும் Andy Burnham ஆகியோரின் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில்
ஸ்டார்மர் இதைத் தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முற்றிலும் மறுசீரமைத்துள்ளது
என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், பிரித்தானிய வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் முக்கிய முன்னேற்றம் எட்டப்படும் எனவும் ஸ்டார்மர் நம்பிக்கை வெளியிட்டார்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து தற்போது எந்த விவாதத்திலும் ஈடுபட விரும்பவில்லை என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.




