பதவி விலகும் கால அட்டவணை இல்லை – ஸ்டார்மர் மீண்டும் திட்டவட்டம்
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் Andy Burnham வெற்றி பெற்றாலும், தாம் பதவி விலகுவதற்கான எந்த கால அட்டவணையையும்
வெளியிடப் போவதில்லை என பிரதமர் Keir Starmer தெரிவித்துள்ளார்.
உஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை இன்று கூறினார்.
மேலும், இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் எவராக இருந்தாலும் அவருக்கு 100 வீத ஆதரவு வழங்கும்
தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கட்சியின் திசை குறித்து யாருக்கென்ன கருத்து இருந்தாலும், அதை ஒதுக்கிவைத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்றும் ஸ்டார்மர் தெரிவித்தார்.
அத்துடன், “இது மிகவும் முக்கியமான இடைத்தேர்தல். தொழிலாளர் கட்சி ஒன்றுபட்டு பிரச்சாரம் நடத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.





