அமெரிக்காவுடன் பேச்சு தொடர்கிறது: ஈரான் தகவல்!
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி (Esmaeil Baghaei ) இன்று (18) தெரிவித்துள்ளார்.
ஈரானின் Mehr News Agency மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
“ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் யுரேனியப் பொருட்கள் குறித்து அவர்கள் (அமெரிக்கா) சில ஊகங்களை எழுப்பினர்.
ஆனால், அதில் எந்த அடிப்படையும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். அமெரிக்க தரப்பில் சில முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதேபோல் நாங்களும் எங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளோம்” எனவும் Esmaeil Baqaei கூறினார்.
ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் இணைந்து கொண்டுவந்துள்ள தீர்மான முன்மொழிவுக்குப் பதிலளித்த Esmaeil Baghaei , “பிராந்தியத்தின் பாதுகாப்பை ஈரான் சீர்குலைப்பதாக ஐநா பாதுகாப்புப் பேரவையால் குற்றம் சாட்ட முடியாது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “கடல்சார் பாதுகாப்புக்கும் சுதந்திர வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் முதன்மையான காரணி அமெரிக்கா தான் என்பதை சீனாவும் ரஷ்யாவும் நன்கு அறியும்.
சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயல்பட விரும்பினால், முதலில் அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.




