இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின்; 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

இன்று காலை 06:00 – 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம்பெறுகின்றன.

முற்பகல் 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும்.

முற்பகல் 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும்.

முற்பகல் 10:30 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்படும்.

முற்பகல் 10:31 மணிக்கு பொதுச்சுடர் மற்றும் சமநேரத்தில் ஒற்றைச் சுடர்கள் ஏற்றப்படும்.

முற்பகல் 10:35 மணிக்கு மலர் வணக்கம் செலுத்தப்படும்.

அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!