சீனாவை உலுக்கும் கனமழை : நால்வர் உயிரிழப்பு!! வெள்ள அபாய எச்சரிக்கை!
சீனாவில் கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மாயமானவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் பிக்கப் டிரக் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மே 15 முதல் 19 வரை தொடர்ச்சியான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளனர். இந்நிலையில் குவாங்டாங் (Guangdong ) மாகாணத்திலும், தென்மேற்கில் உள்ள குய்ஷோவிலும் (Guizhou) அதிகாரிகள் அவசர வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.





