ஜெர்மனியர்களிடம் ஜனாதிபதி முன் வைத்துள்ள உருக்கமான கோரிக்கை!
ஜெர்மனியர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பதையோ, அல்லது பணிப்புரிவதையோ தவிர்க்க வேண்டும் என்று ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெர்ஸின் இந்தக் கருத்துக்கள் அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதட்டங்களை எடுத்துக்காட்டுகின்றன.
சர்வதேச விடயங்கள் பற்றி கருத்து வெளியிட்ட அவர் உலகின் நிலையைப் பற்றி மக்கள் “பேரழிவு மனநிலையில்” சிந்திக்கும் போக்கைக் கொண்டிருப்பதாகவும், ஜெர்மானியர்கள் தங்கள் சொந்த நாட்டின் திறனைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“உலகில் ஜெர்மனியைப் போல, குறிப்பாக இளைஞர்களுக்கு, இத்தகைய சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நாடுகள் மிகச் சிலவே உள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.





