வடக்கு இங்கிலாந்தில் ஒலிம்பிக் போட்டிகள்?
2040 களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் நடத்துவதற்கான
வாய்ப்பை அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் பிரித்தானியாவில் நடைபெறும்.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் பொறுப்பு UK Sport அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வில், திட்டத்தின் செலவுகள், வடக்கு பகுதிகளுக்கு கிடைக்கக்கூடிய பொருளாதார மற்றும் சமூக நன்மைகள், மேலும் பிரித்தானியாவின் முயற்சி வெற்றி பெறும் வாய்ப்புகள் போன்றவை ஆராயப்பட உள்ளன.
இதற்கு முன்பு London நகரம் 1908, 1948 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது.
ஆனால், பிரிட்டனின் மற்ற பகுதிகளில் இதுவரை ஒலிம்பிக் நடத்தப்படவில்லை.
இந்த திட்டத்தை Lisa Nandy மற்றும் Rachel Reeves ஆகியோர் வரவேற்றுள்ளனர்.





