இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அகற்றியது பொலிஸ்!

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

சுப்பர்மடம் பகுதியில் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக, பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய, “மே 18 இனத்தின் வலி! மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றினை மக்கள் கட்டியிருந்தனர்.

இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிவில் உடையில் அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார், திடீரென அந்தப் பதாகையை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பதாகை அகற்றப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பச் சென்ற அப்பகுதி இளைஞரை, “உனக்கு எதிராக வழக்குத் தொடருவோம்” என்று பொலிஸார் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை வலயத்தில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் தொடர்ச்சியாகக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!