இலங்கை

ரயில் தடம் புரண்டு விபத்து – 12 பேர் காயம்!

வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலே இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.

அதேநேரம் படுகாயமடைந்த பயணி ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!