அமெரிக்காவிடம் இருந்து 200 போயிங் ஜெட் விமானங்களை கொள்வனவு செய்யும் சீனா!
200 போயிங் ஜெட் விமானங்களை கொள்வனவு செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அது ஒரு அறிக்கை போல இருந்தாலும், அது ஒரு உறுதிமொழி என்றே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 787 டிரீம்லைனர் மற்றும் 777 போன்ற 100 பெரிய ரக விமானங்களுக்கு கூடுதலாக, சுமார் 500 ஒற்றை வழித்தட போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும் சீனா ஆர்டர் செய்யக்கூடும் என அமெரிக்க ஊடக அறிக்கைகள் விவரித்திருந்தன.
சீன அதிகாரிகளிடம் இருந்து போயிங் நிறுவனம் பெற்ற கடைசி ஆர்டர், 2017-ஆம் ஆண்டு ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பெய்ஜிங் சென்றிருந்தபோது பெறப்பட்டிருந்தது.





