பிரித்தானிய பிரதமருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய சமீபத்திய அமைச்சரவை உறுப்பினர்களில் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) இணைந்துள்ளார்.
உலகளாவிய மோதல்கள் மற்றும் எதிர்கால நெருக்கடிகள் குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளதாக அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பாதுகாப்பாக வழிநடத்த அரசாங்கம் செயல்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக கூறிய பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey)
பிரதமர் அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் அரசியல் ஸ்திரமின்மை பிரித்தானியாவுக்கு பாதகமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
“இப்போது எங்களின் முழு கவனமும் உடனடியாக எதிர்கொள்ளப்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சவால்களை சமாளிப்பதில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொழிலாளர் கட்சிக்குள் Keir Starmer தலைமையை எதிர்த்து விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜான் ஹீலியின் இந்த ஆதரவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.





