வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : மஞ்சள் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் நிலவிய வளிமண்டலக் கோளாறு, ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது 10.1° வடக்கு மற்றும் 82.5° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் அமைந்துள்ளது என்றும், எனவே மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாடு முழுவதும் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரித்துள்ளதுடன், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டைச் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




