உலகம் செய்தி

அரசியலில் அக்கினிப் பரீட்சையை எதிர்கொண்டுள்ள பிரதமர்!

லேபர் கட்சியை 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி வழிநடத்திய Keir Starmer பிரதமர், தற்போது தலைமைத்துவம் தொடர்பில் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளார்.

மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அரியணையேறிய ஸ்டார்மர், பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையிலேயே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மற்றும் அவருக்கு எதிராகக் கடினமாகியுள்ள பொதுமக்களின் மனநிலை ஆகியவற்றால், அவரது அரசியல் வாழ்வில் இனி வரும் காலப்பகுதி அக்கினிப்பரீட்சையாகவே அமையக்கூடும்.

கடந்த 30 வருடங்களில் ஆளுங்கட்சியொன்று சந்தித்த மிக மோசமான தோல்வி உள்ளாட்சித் தேர்தலில் லேபர் கட்சிக்கு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என 30 வரையான லேபர் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பதவி விலகலுக்கான காலக்கெடுவையும் அவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை லண்டனின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சர்வதேச அளவில் பேசப்படுகின்றது.

இந்நிலையில் பிரதமர் இற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆதரவு வெளியிட்டுள்ளார்.

“எனது நண்பர், கீர் ஸ்டார்மர் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமராகப் பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என அவர் கூறியுள்ளார்.

“நான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இங்கிலாந்தின் நான்கு பிரதமர்களைச் சந்தித்துவிட்டேன். தலைவர்கள் அடிக்கடி மாறுவது அந்த நாட்டுக்கு நிலையான தன்மையைத் தராது,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!