இலங்கை

திருத்தப்பட்ட புதிய மின்கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

இவ்வாண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதன்படி மின்சாரக் கட்டணங்களை 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்ததே இந்த மின்சாரக் கட்டண உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மின்சாரக் கட்டண உயர்வால்   நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, 15 பில்லியன் ரூபா மானியம் வழங்க அரசாங்கம் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கமைய 95 சதவீதமான நுகர்வோருக்கு இந்த மின்கட்டணம் பொருந்தாது. அதாவது புதிய மின்கட்டணமானது 180 அலகுகளை பாவிக்கும் நுகர்வோரை மட்டுமே பாதிக்கும்.

அதன்படி, 0 முதல் 180 யூனிட்கள் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான கட்டணங்களில் எந்த உயர்வும் இருக்காது.

இருப்பினும், 181 யூனிட்களுக்கு மேல், அதாவது 210 யூனிட்கள் பயன்படுத்தும் ஒரு மின்சார நுகர்வோருக்கான தற்போதைய கட்டணமான   9,570 ரூபாய்  1,760 ரூபாயால் உயர்த்தப்பட்டு   11,330 ரூபாயாக ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 240 யூனிட்கள் பயன்படுத்தும் ஒரு நுகர்வோருக்கான தற்போதைய கட்டணமான   12,120 ரூபாய்   2,210 ரூபாயால்  உயர்த்தப்பட்டு,  14,330 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், 270 யூனிட்கள் பயன்படுத்தும் ஒரு வீட்டிற்கான மின்சாரக் கட்டணம்   2,660 அதிகரிக்கும் என்றும், 300 யூனிட்கள் பயன்படுத்தும் ஒரு நுகர்வோருக்கான கட்டணம் 3,110 ரூபாயால் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!