பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10இற்கும் மேற்பட்டோர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் காவல்சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 14 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை காவல் சாவடி மீது மோதச் செய்து வெடிக்கவைத்துள்ளார்.
பின்னர், பயங்கரவாதிகள் அந்த இடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதற்கிடையில், தாக்குதலுக்கு உதவ வந்திருந்த மற்ற பாதுகாப்புப் படையினரும், வழியை மறித்திருந்த பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



