முடிவுக்கு வரும் உக்ரைன் போர் – புட்டின் வெளியிட்ட செய்தி!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தான் எண்ணுவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் மிக எளிமையாக நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டப்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், தனது விருப்பமான பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஜெர்மனியின் முன்னாள் அதிபர் கெர்ஹார்ட் ஷரோடர் (Gerhard Schroeder) இருப்பார் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
மொஸ்கோ “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைக்கும் இந்த நடவடிக்கையில், ரஷ்யாவின் பல்வேறு போர் இலக்குகள் அனைத்தும் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் மீண்டும் சூளுரைத்தார்.





