இலங்கை

ஏர்பஸ் கொள்வனவு ஊழல் : மஹிந்தவுக்கு அழைப்பாணை!

2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 விமானங்களையும் எட்டு ஏ-350 விமானங்களையும் வாங்கியபோது, ​​அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.  தற்போது கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.

வரும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் இன்று (09) தங்காலையில் உள்ள கார்டன் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!