ஐரோப்பா

பிரித்தானியாவில் இவ்வாண்டின் இறுதிக்குள் ஆட்சிமாற்றம் ஏற்படுமா? நெருக்கடியில் ஸ்டாமர்!

பிரித்தானியாவின் உள்ளுராட்சி தேர்தலில் தொழிற்கட்சி மிகப் பெரிய அளவில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான சேர் கெய்ர் ஸ்டாமர் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தும் எம்.பிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தன்னுடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிய போதிலும், பிரதமர் பதவியில் நீடித்துப் போராடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பிராட்போர்டு கிழக்கு தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசைன் (Imran Hussain), இந்தத் தேர்தல் முடிவுகளை “பேரழிவு” என்று வர்ணித்ததுடன், “மோசமான அரசியல் தேர்வுகளால் மாற்றத்திற்கான நம்பிக்கை வீணடிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

இது தொடர்பில் அவர் இட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தொழிலாளர் கட்சித் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் தனது கடைசித் தேர்தலில் போட்டியிட்டுவிட்டார் என்பது தெளிவாகிறது.  அது அவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய தலைவருக்கு சுமூகமான முறையில் ஆட்சி மாற்றம் செய்வதற்கான கால அட்டவணையை கட்சி இப்போது வகுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!