உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் மீண்டும் அமைதி பேச்சு?

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான 2 ஆம் கட்ட அமைதி பேச்சு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இச்சந்திப்பு நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றது.

அமைதி பேச்சுக்கு அந்நாடு மத்தியஸ்தம் வகித்தது. எனினும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையிலேயே இரண்டாம் சுற்று பேச்சு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை
உருவாக்குவதற்குரிய ராஜதந்திர ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைக் குறைத்தல், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேர்த்துள்ளது என தெரியவருகின்றது.

அதேபோல், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை ஈரான் இணைத்துள்ளது.

இது பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
2ஆம் சுற்று சந்திப்பு நடைபெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!