இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: மாலை 4 மணிக்கு முடிவு அறிவிப்பு!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும் என தெரியவருகின்றது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைவர் திருமாவளவன இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவுக்கு தமது ஆதரவை நேற்று வழங்கின. காங்கிரஸ் கட்சியும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் தவெக வசம் தற்போது 116 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சியமைப்பதற்குரிய உரிமையை கோருவதற்குரிய 118 என்ற பெரும்பான்மைக்கு இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வசம் இரு தொகுதிகள் உள்ளன. எனவே, விசிக ஆதரவளித்தால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பது உறுதியாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!