உலகம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைந்த இரண்டு கப்பல்களை அமெரிக்கா குறிவைத்ததாகவும், ஈரானியப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரானிய இராணுவம் கூறியது.

அதேநேரம் ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாங்கள் சுட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு மற்றும் பிரதான நிலப்பரப்பில் உள்ள பந்தர் கமீர், சிரிக் ஆகிய அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் வான்வளித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!