“Project Freedom” திட்டம் நிறுத்திவைப்பு : ட்ரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு!
ஈரானுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு உடன்படிக்கைக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்’ ( (Project Freedom)) நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகை தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் உட்பட தலையிடும் நாடுகளின் கோரிக்கைகளையும், தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
“உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்படுமா என்பதைப் பார்ப்பதற்காக, இந்த நடவடிக்கையை ஒரு குறுகிய காலத்திற்கு நிறுத்திவைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறினார்.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், “வலுவான மற்றும் பேரழிவுகரமான” பதிலடியுடன் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக வொஷிங்டன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





