ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பைச் சேர்ந்த நால்வர் குற்றவாளிகளாக அறிவிப்பு!

பிரிஸ்டலில் (Bristol) உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் இங்கிலாந்து தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக, பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

சார்லட் ஹெட் (Charlotte Head), சாமுவேல் கார்னர் (Samuel Corner), லியோனா காமியோ (Leona Kamio) மற்றும் ஃபாத்திமா ராஜ்வானி (Fatema Rajwani ) ஆகிய நால்வரும் ஆகஸ்ட் 6, 2024 அன்று, எல்பிட் சிஸ்டம்ஸ் தொழிற்சாலைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தனர்.

மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும்   “ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்வதே” தங்கள் நோக்கம் என்று அந்த ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்திய வூல்விச் கிரவுன் நீதிமன்றம் ( Woolwich Crown Court) அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!