ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை சீர்குலைக்கும் ஈரானின் எந்த முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது

பிரித்தானிய சமூகத்தை சீர்குலைக்க ஈரான் மேற்கொள்ளும் எந்த முயற்சியையையும் சகித்துக்கொள்ள முடியாது என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

டவுனிங் ஸ்ட்ரீட்-இல் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கு லண்டன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் யூத-எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் இந்த மாநாட்டில் உரையாற்றினார்.

கடந்த புதன்கிழமை கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூத ஆண்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகினர்.

அதே நாளில் இடம்பொற்ற மற்றொரு சம்பவம் தொடர்பாக மூன்றாவது கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யூத-எதிர்ப்பை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியல், காவல்துறை, வணிகம், கல்வி மற்றும் கலைத் துறைகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் யூத-எதிர்ப்பை தூண்டுவதற்கு ஈரான் முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!