குழந்தைகளுக்கான மலேரியா தடுப்பு மருந்துக்கு WHO ஒப்புதல்!
குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 18 சதவீதமானோர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் குழந்தைகளுக்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதனால் பெரும்பாலான இறப்புகளும் பதிவாகியுள்ளன.
2024-ல் மலேரியாவால் 610,000 இறப்புகள் நிகழ்ந்தன, இதில் ஆப்பிரிக்காவில் சுமார் முக்கால்வாசி பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.
மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை மூத்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் கலவைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், இது “மருந்தளவு பிழைகள், பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது” என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.
இந்நிலையல் 2 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் கோர்டெம் பேபி (Coartem Baby), இந்த சிகிச்சை இடைவெளியை நிரப்பும் என்று மருத்துவத் தலைவர்கள் நம்புகின்றனர்.
இந்த மருந்து, தாய்ப்பால் உட்பட திரவங்களில் கரைக்கக்கூடிய இனிப்பு செர்ரி சுவையுடைய மாத்திரைகளாக வருகிறது.
கோஆர்டெம் பேபி (Coartem Baby) இப்போது WHO-வின் முன் தகுதியைப் பெற்றுள்ளது. இது, தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைக் குறிக்கிறது.
மேலும், இது குறிப்பாக சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா போன்ற, அதிக மலேரியா பாதிப்புள்ள பல நாடுகளில் பொதுத்துறை கொள்முதல் செய்ய வழிவகுக்கும்.





