யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்ரேல் வலியுறுத்து!
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும், யூத சமூகத்தைப் பாதுகாக்க உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில்வாழும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.





