உலகம் செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா, சீனா இணக்கம்!

ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோர், பீஜிங்கில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய வர்த்தக முறையைப் பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தைவான் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்தும் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

பசுபிக் தீவு நாடுகளுடனான சீனாவின் உறவை ஆஸ்திரேலியா நேர்மறையாக அணுக வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!