இலங்கை செய்தி

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகம் – 10 இலட்சம் ரூபா அபராதம்

குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக,
ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து,
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

ஹப்புத்தளை, வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு 1,000,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!