உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நால்வர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது.

தமது படை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!