ஈரான் உச்ச தலைவரின் உடல்நிலையில் பாதிப்பு -முழு அதிகாரமும் IRGCயின் வசம்!
ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) படுகாயமடைந்துள்ளதாகவும், மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு காலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை கையொன்றிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முகம் மற்றும் உதட்டில் தீக்காயம் உள்ளதாகவும் இதனால் பேசுவது கடினமாக உள்ளதாகவும் நான்கு மூத்த ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் கமெனி, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதிகளுக்கு முக்கிய முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய அவர் IRGC தளபதிகளின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பெரிதும் சார்ந்திருப்பதாகவும், ‘ நிர்வாகத்தின் இயக்குநராக இருப்பது போல் நாட்டை நிர்வகித்து வருகிறார்’ என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
உறுதியான தலைவர், தனது பலவீனமான தோற்றத்தைத் தவிர்ப்பதற்காக பொதுத் தோற்றங்களைத் தாமதப்படுத்தி வருகிறார். கையெழுத்து குறிப்புகள் மற்றும் நம்பகமான தூதர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





