ஈரானிலிருந்து வந்த கப்பலை இந்திய பெருங்கடலில் வழிமறித்த அமெரிக்கா!
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலொன்றை அமெரிக்கப் படைகள், இந்தியப் பெருங்கடலில் வைத்து வழிமறித்துள்ளன.
மெஜஸ்டிக் எக்ஸ் என்ற பெயருடைய கப்பலில் ஏறி அமெரிக்க ராணுவத்தினர் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈரானுக்குத் தேவையான பொருள் உதவிகளை வழங்கும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைத் இவ்வாறு தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறும் மற்றும் விரோதப் போக்குடைய கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த கடல்சார் தலையீடு அமைந்துள்ளது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா முன்னெடுக்கும் முற்றுகை நடவடிக்கைக்கு அப்பால் தற்போது ஏனைய கடற்பரப்புகளிலும் அமெரிக்கா இத்தகையை நடவடிக்கையை முன்னெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இரு கப்பல்களை அமெரிக்கா ஏற்கனவே சிறைபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





