உலகம் செய்தி

ஓரிரு நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு: ட்ரம்ப் தகவல்!

ஈரானுடன் அடுத்த சில நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதற்கமைய அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே உரையாடல் தொடங்கலாம் என அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய ஒருங்கிணைந்த திட்டத்தை ஈரான் அரசு தயாரிப்பதற்காக, டிரம்ப் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் இன்று நிறைவுக்குவரவிருந்த நிலையிலேயே அதனை நீடிப்பதற்குரிய அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.

எனினும், கடற்படை முற்றுகை நடவடிக்கையை அமெரிக்கா முற்றாக கைவிட்டால் மாத்திரமே அமைதி பேச்சு நடத்துவதற்கு தமது குழு பாகிஸ்தான் செல்லும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி