வளைகுடா நாட்டிற்கு நிதியுதவி – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!
வளைகுடா நாட்டில் நம்பகமான கூட்டாளிகள் என தாம் நம்பும் நாடுகளுக்கு நிதி உதவி அல்லது நாணயப் பரிமாற்றத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆழமாக பாதிக்கப்படும் பட்சத்தில், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடனான நாணயப் பரிமாற்றம் “பரிசீலனையில் உள்ளது” என்று ட்ரம்ப் சி.என்.பி.சி நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
அது நமது ஒரு நல்ல கூட்டாளியாக இருந்து வருகிறது எனத் தெரிவித்த அவர், சவூதி அரேபியா தற்போது “எதையும் கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒரு செல்வந்த நாட்டிற்கான நிதியுதவி அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கொண்டுவரும் என்பதையும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.





