அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டச் சரிவால் ஐரோப்பாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!
அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டச் சரிவானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் வாலண்டின் போர்ட்மேன் இன்ரியா ( Dr Valentin Portman Inria) தலைமையிலான குழு தொடர்புடைய ஆய்வை முன்னெடுத்திருந்தது.
ஆய்வின்படி மெரிடியனல் ஓவர்டேர்னிங் சர்குலேஷன் (Amoc) சரிவடைவதற்கான வாய்ப்பு முன்னர் கணிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் Amoc அதன் முடங்கும் நிலையை அடையக்கூடும் என்றும், 2100-ஆம் ஆண்டிற்குள் அதன் வேகம் 42-58 சதவீதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை அடையும்போது இந்தச் சரிவு கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்படி சரிவினால் கடுமையான குளிர்காலங்கள் மற்றும் கோடைக்கால வறட்சிகள் உட்பட, ஐரோப்பாவிற்குப் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும்.
அதேநேரம் உலகளாவிய வெப்பமண்டல மழைப்பொழிவு முறைகளும் சீர்குலைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





