ஐரோப்பா செய்தி

பிரித்தானிய கொமன்ஸ் அவையில் பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே வாக்குவாதம்

பிரதமரின் கேள்வி நேரத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்னர், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்ததாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

கொமன்ஸ் அவையில் அவர் தெளிவான மற்றும் சுருக்கமான பதில்களை வழங்கியதாகவும் பிரதமரின் அலுவலகம் கூறியுள்ளது.

ஆனால், டோரி தலைவர் கெமி படேனொக் எழுப்பிய கேள்விகளை ஸ்டார்மர் புறக்கணித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர்.

இதற்கு பதிலளித்த பிரதமரின் செய்தித் தொடர்பாளர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் முழுமையான விளக்கங்களுடன் பதிலளித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் அமைச்சர் ஜெஸ்ஸி நார்மன், படேனொக்கின் கேள்விகளுக்கான ஸ்டார்மரின் பல பதில்களில் அவர் விவாதத்தின் திசையை மாற்றியதாக குற்றம் சுமத்தினார். இதனை அவர் அவமதிப்புக்குரியது என்றும் விமர்சித்தார்.

மேலும், அமர்வு முடிவில் ஸ்டார்மரும் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோயிலும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி