ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் கத்துகுத்து தாக்குதல் – நால்வர் கைது

இங்கிலாந்தின்பீட்டர்பரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து நான்கு பதின்ம வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வணிக வளாகம் ஒன்றின் அருகே இந்த தாக்குதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இனவெறி நோக்கத்தால் நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லையென கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடமான ரைஸ்ஹோம் பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் தொடர்ந்து அமலில் உள்ளன. மேலும் அங்கு மக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், 15 வயது சிறுவன் மற்றும் 18 வயது இளைஞர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 மற்றும் 17 வயது இரண்டு சிறுமிகள் குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 16 வயது மற்றொரு சிறுமி கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது ஒரு துயரமான சம்பவம் என்றும், குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும் கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறையின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் ரிச்சர்ட் ஸ்டாட் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் அந்தப் பகுதியில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!