ட்ரம்பின் துறைமுக முற்றுகை வியூகத்துக்கு ஈரான் ராணுவம் பதிலடி!
ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துறைமுகங்கள் முடக்கப்பட்டால் அதனை கடற் கொள்ளை செயலாகக் கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை தமது நாட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை திறக்குமாறு பல தடவைகள் ஈரானிடம் ட்ரம்ப் வலியுறுத்திவிட்டார். ஆனால் ஈரான் இதற்கு இணங்கவில்லை.
இந்நிலையிலேயே துறைமுக முற்றுகை தொடர்பான எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரானிய துறைமுகங்கள் தாக்கப்பட்டால் ஒட்டுமொத்த பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனவும் ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





