விஜயின் அதிரடி அறிவிப்பு – சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 05 இலட்சம் ரூபா உடனடி நிவாரணம்
மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை 8,000 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய்
பல்வேறு திட்டங்கள் அறிவித்தார்.
இதன்போது சிறை பிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை படகு பாதுகாப்பு நிதியாக 05 இலட்சம் ரூபா உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என கூறினார்.
கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.





