உலகம் செய்தி

இராணுவம் மற்றும் அரசியல் என இரு முனைகளிலும் கடும் அழுத்தத்தில் இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமர் தனது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவும், பெய்ரூட் மீதான தாக்குதலை நிறுத்தவும், லெபனான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மூலம் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, லெபனான் அரசாங்கம் இந்த நெருக்கடியை ஈரான் மூலம் அல்லாமல் நேரடியாக இஸ்ரேலுடன் பேசித் தீர்க்க வேண்டுமென விரும்பியதால், ஒரு இஸ்ரேலிய பிரதிநிதியுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது.

ஆரம்ப கட்ட சந்திப்பில் முக்கியமான தீர்வுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை எனவும், இரு தரப்பும் மிக வேறுபட்ட நிலைப்பாடுகளில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உள்நாட்டு அரசியலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மக்கள் ஆதரவில் பின்னடைவு சந்தித்து வருகிறார்.

கருத்துக் கணிப்புகளின்படி, முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் (Naftali Bennett) அவரது லிகுட் கட்சியை விட அதிக இடங்களை பெறக்கூடும் என கூறப்படுகிறது.

இதனால், இராணுவ மற்றும் அரசியல் இரு முனைகளிலும் இஸ்ரேல் கடும் அழுத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!