ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கப்பல்கள் கடக்கவில்லை – ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஹார்முஸ் நீரிணையை எந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பலும் கடக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்தப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் இயக்கப்படவில்லையென
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் IRIB
இதற்கு முன், அமெரிக்க அதிகாரி ஒருவர் பல கடற்படைக் கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்ததாக கூறியதாக அமெரிக்க ஊடகம் Axios செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த முரண்பட்ட தகவல்கள், பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.





