இலங்கை செய்தி

மேற்கு ஆசிய போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்காலிக போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவது மற்றும் அது தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை இதுவென வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிரந்தரமானதொரு தீர்வை எட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்காக அமைதிச் செயல்முறையின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த போர்நிறுத்தத்திற்காக இராஜதந்திர ரீதியாகத் தலையீடு செய்த தரப்பினரின் பங்களிப்பு மற்றும் முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!