ஜெர்மனியில் முடங்கிய விமான சேவை : 72000 பேர் பாதிப்பு!
லுஃப்தான்சா (Lufthansa) ,மற்றும் அதன் பிராந்தியப் பிரிவான லுஃப்தான்சா சிட்டிலைன் (Lufthansa CityLine,) ஆகியவற்றின் விமானப் பணியாளர்கள், UFO தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வேலை நிறுத்த போராட்டமானது நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்காரணமாக சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சுமார் 72000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
முடங்கிய பேச்சுவார்த்தைகளால் இந்த வேலைநிறுத்தம் ஒரு “தவிர்க்க முடியாத ஒன்று என்று UFO தொழிற்சங்கம் கூறியது. அதே நேரத்தில், லுஃப்தான்சா இந்த நடவடிக்கையை “முற்றிலும் விகிதாசாரமற்றது” என்று விமர்சித்தது.
அத்துடன் மேற்படி போராட்டத்தின் விளைவாக , லுஃப்தான்சாவின் புதிய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டி ஏர்லைன்ஸ், போட்டியாளரான வெர்டி தொழிற்சங்கத்துடன் தனது முதல் கூட்டு ஊதிய ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கையெழுத்திட்டுள்ளது.





