ஆங்கிலக் கால்வாய் படகு விபத்து – ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு
ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட படகு விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, கலே அருகே உள்ள செயிண்ட் எட்டியன் ஓ மான்ட் கடற்கரை பகுதியில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, சூடான் நாட்டைச் சேர்ந்த Alnur Mohamed Ali மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
27 வயதான அவர், படகை பிரான்சிலிருந்து இங்கிலாந்து நோக்கி இயக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேவும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரான்ஸ் வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





