” எரிசக்தி பாதுகாப்பு” – ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கம்!
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய எரிபொருள் மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்பட இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் சிங்கப்பூர் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
அதேபோல சிங்கப்பூருக்குத் தேவையான இயற்கை எரிவாயுவை (LNG) ஆஸ்திரேலியா பெருமளவில் வழங்கி வருகின்றது.
இந்நிலையில் மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese இரு நாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிசக்தி விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த ஆஸ்திரேலியப் பிரதமர் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் பிரதமருடன் Lawrence Wong அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார்.





