ஆங்கிலக்கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல் – வேடிக்கை பார்த்த ரோயல் கடற்படை!
ரஷ்ய எண்ணெய்க் கப்பல்களை இடைமறிக்க ரோயல் கடற்படையை அனுப்ப பிரித்தானிய கடற்படை தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புட்டினின் நிழல் கடற்படையை “இன்னும் கடுமையாகத் தாக்குவோம்” என்று சர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்த போதிலும், ஆங்கிலக்கால்வாயில் பயணித்த ரஷ்ய கப்பலலை இடைமறிக்க பிரித்தானியா தவறியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் அதன் நட்பு நாடுகளைச் சென்றடைவதைத் தடுக்கும் வகையில், ஆங்கிலாக்கால்வாய் ஊடாக பயணிக்கும் கப்பல்களை தடுக்க ரோயல் கடற்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி உக்ரைனுக்கு வலுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும் அதனை முன்னெடுப்பதற்கு சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய சில சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நிழல் கடற்படை பிரிட்டிஷ் கடல் வழியாகச் செல்வதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து அட்டர்னி ஜெனரல் லார்ட் ஹெர்மர் (Lord Hermer) அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.





